மாவைக்கு என்ன லூசா?… தலை பிழையா?: கடுப்பாகிய சங்கரி!

119 0

மாவை சேனாதிராசாவிற்கு லூசா, தலை பிழையா என காட்டமாக கேட்டுள்ளார் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் வீ.ஆனந்தசங்கரி.
யாழ்ப்பாணத்தின் ஆனைக்கோட்டையில் நேற்று முன்தினம் நடந்த நிகழ்வொன்றில் உரையாற்றியபோதே இப்படி கேள்வியெழுப்பியுள்ளார்.
“யுத்தம் நடந்தபோது, அந்த மக்களை காப்பாற்ற எதுவும் செய்யாமல் இந்தியாவிற்கு ஓடிப்போய் இருந்து விட்டு, இப்பொழுது வந்து சேனாதி சொல்கிறது, யுத்தத்தில் உயிரிழந்தவர்களிற்கு நினைவு மண்டபம் கட்டப் போகிறேன் என.
இல்லை, நான் கேட்கிறேன்- உனக்கு என்ன லூசா? தலை பிழையா?. தலை பிழையென்றால் எங்கேயாவது கட்டிவிட்டு இரு. உடமையை, உறவுகளை, பிள்ளைகளை இழந்து- எல்லாவற்றையும் இழந்துவிட்டு வந்து நிற்கிறார்கள். அவர்கள் யுத்தத்தில் சிக்கியிருந்தபோது, செய்ய வேண்டியவற்றை செய்யாமல், இப்பொழுது எதற்காக இது? எமக்கு இது தேவையில்லை.
ஜனாதிபதி ஏமாற்றி விட்டார், ரணில் ஏமாற்றி விட்டார் என எல்லா இடமும் சொல்கிறார். போன கிழமை ஜனாதிபதி யாழ்ப்பாணம் வந்தபோது, ஹீ என பல்லைக்காட்டிக் கொண்டு போய் நிற்கிறார். ஜனாதிபதி ஏமாற்றி விட்டார் என்றுவிட்டு, போய் நிற்கிறார்கள்.
சுமந்திரனும் போய் நின்றார். சுமந்திரனின் கடவுள் ரணில் விக்கிரமசிங்க. அவரும் போனார். ஜனாதிபதிக்கு அங்கால மூன்றாவது வரிசையில் அவரை இருக்க வைத்தார்கள். ஜனாதிபதி அவரை திரும்பியும் பார்க்கவில்லை. பிறகு ஆளுனர்தான் சொன்ன பிறகு, கைகொடுத்தார் ஜனாதிபதி. வெட்கம் கெட்டவர்கள்“ என்றார்.

Related Post

ரவுடிகளைக் கைது செய்யாததால் பொலிசாரின் விடுமுறைகள் இரத்து

Posted by - April 27, 2018 0
சாவகச்சேரி மற்றும் கொக்குவில் இடம்பெற்ற வாள்வெட்டுக் கும்பல்களின் அடாவடித் தனங்கள் தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுத்து இதுவரைக்கு எவரையும் கைது செய்யாததால் யாழ்ப்பாண பிராந்திய பொலிஸ் நிலையங்களின்…

அதிபருக்கெதிரான முறைப்பாட்டினை மீளப்பெறுமாறு மாணவனுக்கு மிரட்டல்

Posted by - February 20, 2019 0
தன் மீது தாக்குதல் மேற்கொண்டார் என பாடசாலை அதிபர் ஒருவருக்கு எதிராக பாடசாலை மாணவன் காவல் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டை மீளப்பெறுமாறு மாணவனுக்கு வலய கல்வி அதிகாரிகள்…

தமிழர்களுக்கான தீர்வை நாமே தேடிக் கொள்ள தயங்க மாட்டோம்: சம்பந்தன்

Posted by - April 25, 2018 0
ஒன்றிணைந்த இலங்கைக்குள் தமிழ் மக்களுக்கு உரிய தீர்வு கிடைக்காவிட்டால் தமிழ் மக்கள் தமக்குரிய வழியினை வகுத்துக்கொள்வார்கள் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன்…

விக்னேஸ்வரன் முதலமைச்சர் இல்லையென்றால் தமிழினப்படுகொலை மூடிமறைக்கப்பட்டிருக்கும்- பொ.ஐங்கரநேசன்

Posted by - June 10, 2018 0
அரசியல்வாதிகள் சிலர் முதலமைச்சர் மீதும், வடக்கு மாகாணசபை மீதும் கடுமையான விமர்சனங்களை முன்வைக்கத் தொடங்கியுள்ளார்கள். இந்த அரசியல்வாதிகள் மாகாணசபை சரியாக இயங்கவில்லை என்றும், வந்த அபிவிருத்தித் திட்டங்களைத்…

தமிழர்களின் முன் இரண்டு தேர்வுகளே உள்ளன : நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரனது மாவீரர் நாள் செய்தி

Posted by - November 28, 2018 0
உரிமைகளுக்காக விட்டுக் கொடுப்பின்றிப் போராடி, எமக்கான சுதந்திர தாயகத்தை அமைத்தல், அல்லது சிங்கள இனவாதத்துக்குப் பயந்தோ அல்லது பணிந்தோ எமது அடிப்படைகளை இழப்பது. சிறிலங்கா அரசையும், அனைத்துலகச்…