யாழில் சற்றுமுன் ரௌடிகள் அட்டகாசம்: வீடு புகுந்து அடித்து நொறுக்கினர்!

210 0

கோண்டாவில் அன்னங்கை பகுதியில் உள்ள வீடு ஒன்றினை மர்ம கும்பல் அடித்து நொறுக்கி விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் இன்று இரவு 9.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
கோண்டாவில் அன்னங்கை பகுதியை சேர்ந்த முச்சக்கர வண்டி சாரதி ஒருவரின் வீட்டிற்கு இரு மோட்டார் சைக்கிகளில் முகங்களை மூடியவாறு வந்த நான்கு ரௌடிகள் இந்த அடாவடியில் ஈடுபட்டனர்.
வீட்டின் யன்னல்களை அடித்து நொறுக்கியதுடன் வீட்டில் தரித்து நின்ற முச்சக்கர வண்டியையும் அடித்து நொறுக்கிவிட்டு வீட்டில் இருந்தவர்களை வாள்களை காட்டி அச்சுறுத்தியதுடன் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
வீட்டுக்காரின் அவலக் குரல் கேட்டு அப்பகுதி இளைஞர்கள் ஒன்றுகூடி, ரௌடிக் கும்பலை துரத்திய போதும் அவர்கள் தப்பிச் சென்றுள்ளனர். இந்த சம்பவத்தினால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளனர். இது தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Related Post

எச்சரிக்கை… இன்று வடக்கு, கிழக்கு மக்களே அவதானம்!

Posted by - March 7, 2019 0
வடக்கு, கிழக்கு மாவட்டங்கள் உள்பட 11 மாவட்டங்களில் இன்று (7) வெப்பநிலை கடுமையாக இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த மாவட்டங்களின் வெப்பநிலை 32…

யாழ் சாவகச்சேரி ஸ்ரார் உணவகத்தின் திருட்டு சம்பவத்துடன் தொடர்புபட்ட இளைஞனை மடக்கி பிடித்த உரிமையாளர்!!

Posted by - February 18, 2019 0
யாழ் சாவகச்சேரி ஸ்ரார் உணவகத்தில் கடந்த சிலமாதங்களுக்கு முன்  இடம்பெற்ற  திருட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர் என சீசிரீவி கமரா மூலம் அடையாளம் காணப்பட்ட நபர் உடையார்கட்டு சுகந்திரபும்…

யாழ்ப்பணத்தில் பிரதமர் வி. உருத்திரகுமாரன். நடந்தது என்ன?

Posted by - March 27, 2019 0
சுதந்திர தமிழீழ அரசு என்ற வேட்கையூடன் ஜனநாயகரீதியாக போராடி வரும் நாடுகடந்ததமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது யாழ் ஊடகர்கள் சந்திப்புஇ தென்னிலங்கையில் பரும் பரபரப்பை ஏற்படுத்தியூள்ளது.…

ஓங்கி ஒலித்தது உரிமைக் குரல் கண்ணீரால் நனைந்தது கிளிநொச்சி குழப்பம் விளைவித்த பா.உ சிறிதரன் அடியாட்கள்..!

Posted by - February 25, 2019 0
கிளிநொச்சியில் காணாமல் போனவர்களின் உறவுகள் நடத்திய இன்றைய மாபெரும் போராட்டத்தில் கட்சி உறுப்பினர்கள் சிலர் கட்சி அரசியல் செய்து, மோதலில் ஈடுபட்டனர் என குற்றம்சாட்டப்பட்டுள்ளது. குண்டர்கள் குழுவால்…

‘சமூக ஊடங்கள் ஆயிரம் ஹிட்லர்களை உருவாக்க வல்லது’: மாலைதீவில் வைத்து மைத்திரிக்கு பதிலளித்த ரணில்!

Posted by - September 4, 2019 0
“சமூக ஊடகங்கள் பண்டைய காலத்தின் கடவுளைப் போன்றது: உருவாக்கவும், அழிக்கவும் வல்லது. சுதந்திரத்தின் செய்தியைப் பரப்பவும் வல்லது. அழிவுக்கு வழிவகுக்கும் உணர்ச்சிகளை தூண்டும் திறனையும் கொண்டது” என்று…