வவுனியா தமிழ் அரசு கட்சி அலுவலகத்தில் களேபரம்: இளைஞரணி உறுப்பினர்கள் அடிதடி!

113 0

தமிழரசு கட்சியின் வவுனியா இளைஞரணி உறுப்பினர்கள் இருவர் தங்களுக்குள் முட்டிமோதிக்கொண்ட சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றது.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,
தமிழரசு கட்சியின் வவுனியா மாவட்ட இளைஞரணியை சேர்ந்த சிந்துஜன் என்பவரும், சீலன் என்பவருமே இவ்வாறு மல்லுக்கட்டியுள்ளனர். தொலைபேசி வாயிலாக ஏற்பட்ட முரண்பாடு, நேரில் சந்தித்தபோது அடிதடியாக மாறியது.
தமிழரசுகட்சியின் தலைமை அலுவலகமான தாயாகத்திற்கு முன்பாக சந்தித்துகொண்ட இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி சண்டையில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ்அரசு கட்சியின் வவுனியா மாவட்ட தலைவரும் முன்னாள் மாகாண அமைச்சருமான ப.சத்தியலிங்கத்துடன் சீலன் என்பவர் வாகனத்தில் வந்து இறங்கியபோது, அந்த பகுதிக்கு சிந்துஜனும் வர, களேபரம் ஆரம்பித்தது.
மல்லுக்கட்டிய இருவரையும் பெரும் பிரயத்தனத்தின் மத்தியில் சமாதானம் செய்த ப.சத்தியலிங்கம், அவர்களை அலுவலகத்திற்குள் கூட்டிச் சென்றார்.
அடிதடியின் பின்னர் கட்சியின் வவுனியா மாவட்ட முக்கியஸ்தர்கள் கட்சியின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டு சம்பவம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Post

இளைஞர் மாநாட்டைக் கூட்டுகிறார் முதலமைச்சர் விக்னேஸ்வரன்

Posted by - April 24, 2018 0
இளைஞர் மாநாடு ஒன்றை எதிர்வரும் ஜூன் மாதம் நடத்துவதற்கு தமிழ் மக்கள் பேரவை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சற்று முன் யாழ் கொக்குவிலில் நடன ஆசிரியை துரத்தித் துரத்தி வெட்டப்பட்டார்!!

Posted by - April 30, 2018 0
யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்த வாள் வெட்டுக் கும்பல் அங்கு வசித்த நடன ஆசிரியையும், அவரது தாயாரையும் வாளால் கொடூரமாக வெட்டி படுகாயப்படுத்தியுள்ளனர் என்று பொலிஸார்…

அனைவருக்கும் நியமனம் வேண்டும் – பட்டதாரிகள் போராட்டம்

Posted by - April 25, 2018 0
அனைத்து பட்டதாரிகளுக்கும் கடந்த காலத்தில் வழங்கப்பட்டது போல் பட்ட இறுதிச் சான்றிதழ் அடிப்படையில் நியமனங்களை வழங்குதல் வேண்டும் என வலியுறுத்தி கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக…

வினைத்திறன் இல்லாத தவிசாளர் சிவமங்கை பதவி விலகவேண்டும்

Posted by - June 6, 2018 0
யாழ்ப்பாணம் சாவகச்சேரி நகரசபையின் தவிசாளர் பதவி விலகவேண்டும் என நகரசபையின் நகர வட்டார தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர் பரமேஸ்வரன் ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார். இன்றையதினம் காலை 09:00…