ஆளில்லாத கடையில் ரீ ஆத்திய கருணா: புகைப்படம் எடுத்த ஊடகவியலாளர்களை மிரட்டிய அடியாட்கள்!

169 0

அம்பாறை மாவட்டம் காரைதீவு பகுதியில் மக்கள் சந்திப்பு ஒன்றில் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி கட்சியின் (கருணா குழு) அடியாட்களின் அச்சுறுத்தல் காரணமாக ஊடகவியலாளர்கள் பலர் வெளியேற்றப்பட்டனர்.
கட்சியின் தலைவர் விநாயக மூர்த்தி முரளிதரனும் ஊடகவியலாளர்களை வெளியேறி செல்லுமாறு பணித்தார்.
இன்று திங்கட்கிழமை (2) மாலை கூட்டம் நடப்பதாக ஊடகவியலாளர்களிற்கு கருணா குழுவினால் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனடிப்படையில் கூட்டத்திற்கு ஊடகவியலாளர்கள் சென்றிருந்தனர்.
எனினும், கூட்டத்தில் ஓரிரண்டு பொதுமக்களே கலந்து கொண்டனர். இதனால் சங்கப்படப்பட்ட கருணா குழு, அடாவடியாக ஊடகவியலாளர்களை வெளியேற பணித்தது. சில ஊடகவியலாளர்களின் புகைப்படக்கருவில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை அழிக்கும்படியும் வற்புறுத்தியது.
அண்மையில் தேர்தல்கள் இடம்பெறவுள்ள நிலையில் மக்களை சில தரப்பினர் திட்டமிட்டு ஏமாற்றுவதை ஊடகங்கள் செய்தியாக வெளியீட்டு வருவதும் சுட்டிக்காட்டத்தக்கது.

Related Post

கோர விபத்து 5 பேர் பலி! படங்கள் இணைப்பு

Posted by - May 11, 2018 0
காலை கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற தனியார் பஸ் ஒன்று புத்தளம், மதுரங்குளி பகுதியில் பாரிய விபத்து இதுவரை 5 பேர் பலி! 30 பேர் அளவில்…

கேள்விக்கு முதல்வர் பதில்!

Posted by - May 5, 2018 0
கேள்வி–வட கிழக்கில் இராணுவத்தினர் தொடர்ந்து குடியிருக்க எந்தவித காரணமும் இல்லை என்று அண்மையில் ஆங்கில பத்திரிகை ஒன்றிற்குக் கூறியுள்ளீர்கள். இதனால் அரசாங்கத்துடன் நீங்கள் முரண்டு பிடிப்பது மட்டுமன்றி…

யாழ் வண்ணார் பண்ணையிலுள்ள வீடொன்றின் மீது தாக்குதல்

Posted by - July 20, 2018 0
மோட்டார்சைக்கிளில் வந்த குழுவொன்று யாழ். வண்ணார் பண்ணையிலுள்ள வீடொன்றின் மீது தாக்குதலை நடத்தியுள்ளதாக தெரியவருகிறது. குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாகவும், வீட்டின் கதவு, ஜன்னல் கண்ணாடி…

“திருடர்களை பிடிக்க வந்த ஆட்சியை திருடர்கள் பிடித்து விட்டார்களோ”- மனோ கணேசன்

Posted by - April 29, 2018 0
கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மனோ கணேசன் அவர்கள், நல்லாட்சி’ அரசு பதவிக்கு வந்து 3 வருடங்கள் சென்றுள்ளன. இந்த அரசு பதவிக்கு வரும்போது பலத்த எதிர்பார்ப்புக்கள் இருந்தன.…