சாய்ந்தமருது சம்பவத்தை உரிமை கோரியது ஐ.எஸ்!

247 0

சாய்ந்தமருதில் பொலிசாருடன் நடந்த மோதலில் தமது அமைப்பை சேர்ந்ந்த மூவர் தற்கொலை தாக்குதல் நடத்தி உயிரிழந்ததாக ஐ.எஸ் அமைப்பு அறிவித்துள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை ஐ.எஸ் அமைப்பின் உத்தியோகபூர்வ செய்தி இணையத்தில் இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
அபு ஹமீட், அபு சுஃபியான், அபு அல் ஹஃகா ஆகியோரே உயிரிழந்ததாக தெரிவித்தது.
அத்துடன் 15 பேர் உயிரிழந்ததாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், உயிரிழந்த அனைவரும் அந்த குழுவை சேர்ந்தவர்கள் என்றே சுயாதீன தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, சஹ்ரானின் சகோதரர் ரில்வான் துப்பாக்கியுடன் நிற்கும் படத்தையும் ஐ.எஸ் வெளியிட்டது. குண்டுப்பரிசோதனையில் ஈடுபட்டபோது, தவறுதலாக வெடித்து ரில்வானின் விரல்கள், கண் பாதிக்கப்பட்டிருந்ததாக புலனாய்வு வட்டாரங்கள் ஏற்கனவே குறிப்பிட்ட நிலையில், நேற்று தற்கொலையாளிகள் வெளியிட்ட வீடியோவில் அவரது விரல்கள், கண் பாதிக்கப்பட்டிருந்தது தெரிந்தது.

Related Post

மறப்போம் மன்னிப்போம் என்ற பேச்சுக்கு இடமளிக்கமாட்டோம்!! – சம்பந்தன் ரணிலுக்கு பதிலடி!!

Posted by - February 20, 2019 0
“பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் மறப்போம் மன்னிப்போம் என்ற கருத்தை அடியோடு நிராகரிக்கின்றோம். மறப்போம் மன்னிப்போம் என்ற பேச்சுக்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம். படையினரின் போர்க்குற்றங்களால் பாதிக்கப்பட்ட மக்கள் வன்னியில்…

ஓங்கி ஒலித்தது உரிமைக் குரல் கண்ணீரால் நனைந்தது கிளிநொச்சி குழப்பம் விளைவித்த பா.உ சிறிதரன் அடியாட்கள்..!

Posted by - February 25, 2019 0
கிளிநொச்சியில் காணாமல் போனவர்களின் உறவுகள் நடத்திய இன்றைய மாபெரும் போராட்டத்தில் கட்சி உறுப்பினர்கள் சிலர் கட்சி அரசியல் செய்து, மோதலில் ஈடுபட்டனர் என குற்றம்சாட்டப்பட்டுள்ளது. குண்டர்கள் குழுவால்…

இலங்கையில் மனித உரிமைகள், மீளிணக்கம் என்பன தொடர்பான நடவடிக்கைளில் நெருங்கிப் பணியாற்றுவதற்கு இலங்கையும் ஐரோப்பிய ஒன்றியமும் இணங்கியுள்ளன.

Posted by - February 15, 2019 0
இலங்கையில் மனித உரிமைகள், மீளிணக்கம் என்பன தொடர்பான நடவடிக்கைளில் நெருங்கிப் பணியாற்றுவதற்கு இலங்கையும் ஐரோப்பிய ஒன்றியமும் இணங்கியுள்ளன. நேற்;று பிறஸல்ஸில் இடம்பெற்ற ஐரோப்பிய ஒன்றிய இல்ஙகை கூட்டு…

யாழ் சாவகச்சேரி ஸ்ரார் உணவகத்தின் திருட்டு சம்பவத்துடன் தொடர்புபட்ட இளைஞனை மடக்கி பிடித்த உரிமையாளர்!!

Posted by - February 18, 2019 0
யாழ் சாவகச்சேரி ஸ்ரார் உணவகத்தில் கடந்த சிலமாதங்களுக்கு முன்  இடம்பெற்ற  திருட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர் என சீசிரீவி கமரா மூலம் அடையாளம் காணப்பட்ட நபர் உடையார்கட்டு சுகந்திரபும்…

5 சடலங்கள் மீட்பு, இராணுவ தரப்பிலும் இழப்பு, கிழக்கில் தொடர்கிறது பதற்றம்..

Posted by - April 27, 2019 0
கல்முனை- சாய்ந்தமருது பகுதியில் இடம்பெற்ற தீவிரவாதிகளுக்கும் இராணுவத்திற்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் இரு பெண்கள் உட்பட 5 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை அஷ்ரப் வைத்திசாலைக்கு 5…