கிறிஸ்த்தவர்கள் மீதான தாக்குதலுக்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கண்டனமும் கொல்லப்பட்டவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலும் தெரிவித்துள்ளார்.

317 0

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று தேவாலயங்கள் மீதும் உல்லாச விடுதிகள் மற்றும் குடியிருப்புக்கள் மீதும் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதுடன் இந்த தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்திருக்கிறனர்.
தமிழர்களாக இனப்படுகொலையினால் பாதிக்கப்பட்டவர்கள் என்கிற வகையிலும் இத்தகைய துயரங்கள் ஏராளமானவற்றை அனுபவித்தவர்கள் என்கிற வகையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியானது கிறிஸ்தவ மக்களுக்கும் இந்த உயிர்த்த ஞாயிறு படுகொலையில் பாதிக்கப்பட்ட ஏனையவர்களதும் துயரத்தில் இதயபூர்வமாக பங்கெடுத்துக் கொள்வதுடன் தோழமையுணர்வை வெளிப்படுத்தி அவர்களுடன் இணைந்து நிற்கின்றது.
இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இன அழிப்யு யுத்தம் 2009 மே மாதம் முடிவிற்குக் கொண்டுவரப்பட்ட பின்னர் கிறிஸ்தவர்களின் புனித நாளாகிய உயிர்த்த ஞாயிறு தினத்தன்று திட்டமிட்டு ஒருங்கிணைக்கப்பட்டு கிறிஸ்தவர்கள் மீது நடாத்தப்பட்டிருக்கின்ற இந்த படுகொலைகள் சிறிலங்காவில் வாழும் மக்களுக்கு அமைதியும் நல்லிணக்கமும் இன்னமும் கிட்டவில்லை என்பதை மீளவும் வெளிப்படுத்தியிருக்கின்றது. எவ்வளவு விரைவாக இந்த யதார்த்தத்தை நாம் ஏற்றுக்கொள்கின்றோமோ அந்தளவு விரைவாக இந்த தீவில் நிலவும் அடிப்படை முரண்பாடுகளை நாம் அடையாளப்படுத்தி அதற்கான தீர்வுகளை நோக்கி நகர முடியும்.

பாதிக்கப்பட்ட மக்களை மையப்படுத்திய சமாதான மற்றும் நல்லிணக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படாது தவிர்க்கப்படுமிடத்து இந்த தீவானது தொடர்ந்தும் சகிப்புத்தன்மையற்ற இனவாதமும் மதவெறியும் கொண்ட பூமியாகவே திகழும் என்பதை தமிழ் தேசிய மக்கள் முன்னணியானது இந்த சந்தர்ப்பத்தில் மீளவும் சுட்டிக்காட்டுகின்றது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணி உட்பட தமிழர்கள் அனைவரும் இனவாதத்திற்கும் மதவெறிக்கும் சகிப்புத்தன்மையற்ற அணுகுமுறைக்கும் எதிராக உறுதியுடன் நிற்போம் என்பதை இந்தத் தருணத்தில் வெளிப்படுத்துகின்றோம். அத்தோடு பொறுப்புக்கூறலினூடும் நேர்மையான நல்லிணக்கத்தினூடும் வரக்கூடிய உண்மையான சமாதானத்திற்காக விசுவாசத்துடன் செயற்பட விரும்பும் அனைத்துத் தரப்பினரோடும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தன் கரங்களை இணைத்து பணிபுரியத் தயாராக இருக்கிறது எனவும் தெரிவித்தார்.

நன்றி

கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
தலைவர்

செல்வராசா கஜேந்திரன்
பொதுச் செயலாளர்.

Related Post

ஆற்றிலிருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்பு!!

Posted by - July 9, 2018 0
நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெசல்கமுவ ஓயாவிற்கு நீர் வழங்கும் கிளை ஆறான சென். ஜோன்டிலரியிலிருந்து பெண்ணொருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் இன்று காலை மீட்கப்பட்டதாக நோர்வூட்…

எச்சங்களுடன் உணவுப் பொருள்கள்- வர்த்தகருக்கு தண்டம்!!

Posted by - July 26, 2018 0
சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கும் வகையில் உணவுப் பொருள்களை விற்பனைக்கு வைத்திருந்த வர்த்தகருக்கு சாவகச்சேரி நீதிமன்றில் இன்று 9 ஆயிரம் ரூபா தண்டம் விதிக்கப்பட்டது. சாவகச்சேரி சுகாதாரத் திணைக்கள…

மாகாண சபைத் தேர்தலை டிசம்பர் 23 அல்லது ஜனவரி 5 இல் நடத்தத் தீர்மானம்!

Posted by - July 20, 2018 0
மாகாண சபை தேர்தலை டிசம்பர் 23 அல்லது ஜனவரி 5 ஆம் திகதி நடத்துவதற்கு கட்சி தலைவர்கள் கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. மாகாண சபை தேர்தலுக்கான…

யாழ் வண்ணார் பண்ணையிலுள்ள வீடொன்றின் மீது தாக்குதல்

Posted by - July 20, 2018 0
மோட்டார்சைக்கிளில் வந்த குழுவொன்று யாழ். வண்ணார் பண்ணையிலுள்ள வீடொன்றின் மீது தாக்குதலை நடத்தியுள்ளதாக தெரியவருகிறது. குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாகவும், வீட்டின் கதவு, ஜன்னல் கண்ணாடி…

விசுவமடுவில் கணவனையிழந்த பெண்ணுக்கு வாழ்வாதரமாக வழங்கபட்ட ஆடுகளுக்கு நேர்ந்த கதி!

Posted by - July 28, 2018 0
முல்லைத்தீவு விசுவமடு கிழக்கு பகுதியில் கணவனை இழந்த பெண் தலைமை குடும்பத்திற்கு வாழ்வாதாரத்திற்கு வழங்கப்பட்ட 08ஆடுகளும்,03 குட்டிகளும் விசமிகளால் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளது . விசமிகளால்…