அவசரகால சட்டத்திற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியானது!

273 0

அவசரகால நிலைமையை பிரகடனப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தல் நள்ளிரவில் வெளியானது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கையொப்பமிட்டு வெளியிடப்பட்ட இந்த வர்த்தமானி அறிவித்தல், இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அனுமதி கோரப்படும். பத்து நாட்களிற்கு மேல் அவசரகால சட்டம் அமுல்ப்படுத்தப்படுவதெனில், நாடாளுமன்றத்தின் அனுமதி கோரப்பட வேண்டும்.
இதேவேளை, நேற்று மதத்தலைவர்கள் மற்றும் கட்சி தலைவர்களிற்கிடையிலான சந்திப்பை ஜனாதிபதி நடத்தினார். சபாநாயகர் தலைமையில் கட்சித் தலைவர்கள் கூட்டம் இடம்பெற்றது. இதன்போது, இன்றைய நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரல் குறித்து தீர்மானிக்கப்பட்டது.
இன்று தேசிய துக்கதினமென்பதால், நாடாளுமன்றம் நண்பகல் கூடியதும் பிரதமர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் உரையாற்றிய பின்னர் நாடாளுமன்றத்தை ஒத்திவைப்பதென்றும், நாளை மீண்டும் நாடாளுமன்றம் கூடி அவசரகால சட்டம் தொடர்பான வாக்கெடுப்பை நடத்துவதென்றும் தீர்மானிக்கப்பட்டது.

Related Post

யாழ் பல்கலைக்கழக வளாகத்துக்குள் நினைவாலயம் அமைக்க தடை!

Posted by - April 26, 2018 0
யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவாலயம் அமைப்பதற்கு இடைக்கால தடை விதித்து பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு உயர் மட்டத்திலிருந்து அறிவுறுத்தப்பட்டுள்ளது.

யாழ். பல்கலைக்கழத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை இடிப்பதற்கு நடவடிக்கை?

Posted by - May 7, 2018 0
யாழ். பல்கலைக்கழத்தில் கட்டப்பட்டு இடைநிறுத்தப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை இடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

எகிறியது பால்மாவின் விலை!! நெருக்கடியில் பாவனையாளர்கள்!!

Posted by - May 4, 2018 0
பால் மாவின் விலையை அதிகரிக்குமாறு வாழ்க்கைச் செலவு குழு, நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு பரிந்துரைத்துள்ளதாக தொழில் மற்றும் வணிக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். அதன்படி,…

முல்லைத்தீவில் மினி சூறாவளி

Posted by - April 26, 2018 0
முல்லைத்தீவு, மாங்குளம் பகுதியில் மழையுடன் கூடியகடும் காற்று வீசியதன் காரணமாக மினி சூறாவளி ஏற்பட்டுள்ளது. இதனால் பல வீடுகள் சேதமடைந்துள்ளதாக முல்லைத்தீவு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்…

8பேரை திருமணம் முடித்து ஏமாற்றிய பெண் இலங்கையில்!

Posted by - January 31, 2019 0
8பேரை திருமணம் முடித்து ஏமாற்றிய பெண் இலங்கையில் சுமார் 8 இளைஞர்களை ஏமாற்றி திருமணம் செய்து பண மோசடியில் ஈடுபட்ட பெண் கைது! இத்தாலி, கனடா போன்ற…