தமிழ் மக்கள் மீது இராணுவம் இரசாயன குண்டுத்தாக்குதல் நடத்தியது – மாவை

306 0

இறுதி யுத்தத்தில் பொதுமக்களை இலக்கு வைத்து அரசாங்கம் தாக்குதல் நடாத்தியதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு மீண்டும் மீண்டும் குற்றம் சுமத்தியுள்ளது.

நாடாளுமன்றத்தில் இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற இந்த ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் மீதான குழுநிலை விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘இறுதி யுத்தத்தில் பொதுமக்களை ஒரே இடத்தில் கூடுமாறு இராணுவம் அறிவித்தது.

இவ்வாறு ஒரே இடத்தில் கூடியவர்கள் மீது இராணுவம் கொத்தணிக் குண்டுத்தாக்குதல் அதேபோன்று இரசாயன தாக்குதல் மேற்கொண்டது.

இதற்கான ஆதாரங்கள் காணப்படுகின்றன. பல தொண்டு நிறுவனங்கள் இதுகுறித்து சாட்சியமளித்துள்ளன.

இவ்வாறான செயற்பாடுகள் மூலம் இராணுவம் யுத்தக்குற்றச்சாட்டுக்களில் ஈடுபட்டுள்ளது என்பது நிரூபணமாகியுள்ளது’ என தெரிவித்துள்ளார்.


Related Post

சற்றுமுன் வவுனியா இறம்பைகுளத்தில் விபத்து-இளைஞன் படுகாயம்!

Posted by - May 11, 2018 0
சற்றுமுன் வவுனியா ஹொரவப்பொத்தான வீதி இறம்பைகுளம் பகுதியில் ஏற்பட்ட வீதி விபத்தில் இளைஞர் ஒருவர் படுகாயம் இச்சம்பவம் பற்றி மேலும் அறியவருவதாவது வவுனியா ஹொரவப்பொத்தான வீதி இறம்பைகுளம்…

கிளிநாச்சியில் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் மற்றும் பயங்கரவாத தடைச்சட்டம் ஆகியவற்றை எதிர்த்து போராட்டம்!

Posted by - February 20, 2019 0
இலங்கையில் தற்போது பயங்கரவாதம் இல்லை என அரசு அறிவித்த போது ஏன் இன்னும் பயங்கரவாத தடைச் சட்டத்தை மாத்திரம் நடைமுறையில் வைத்திருக்கிறது எனத் தெரிவித்து கிளிநொச்சியில் இன்று…

கூட்டமைப்பு தமிழ் மக்களுக்காக என்ன செய்தார்கள்: நாமல்!

Posted by - November 5, 2018 0
தமிழ் தேசிய கூட்டமைப்பு கடந்த காலங்களில் தமிழ் மக்களுக்காக என்ன செய்தார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்ராஜபக்ஷ கேள்வி எழுப்பியுள்ளார். மூன்றரை வருடத்தில் தமிழ் மக்களுக்காக கூட்டமைப்பு…

யாழில் கர்ப்பிணிப் பெண்ணை உதைந்து விழுத்தி விட்டு தாலிக் கொடியை அபகரித்துச் சென்ற கொள்ளையர்கள்

Posted by - December 25, 2018 0
யாழ்ப்பாணம் தென்மராட்சி மீசாலையில் இளம் கர்ப்பிணிப் பெண் ஒருவரின் தாலிக்கொடியை மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் அறுத்துச் செல்லப்பட்டுள்ளது. இக்கொள்ளை சம்பவம் இன்று மதியம் 1.30 மணிக்கு…

‘வாங்கோ… காட்டுறன்’: பெண் உறுப்பினரை அழைத்த யாழ் முதல்வர் ஆர்னோல்ட்!

Posted by - March 12, 2019 0
யாழ் மாநகரசபையின் இன்றைய அமர்வில் இடம்பெற்ற சம்பவமொன்று, சபையில் பெரும் சிரிப்பொலியை ஏற்படுத்தியது. அதேவேளை, யாழ் மாநகரசபை முதல்வரின் மனதில் படிந்துள்ள ஆணாதிக்கதனத்தை வெளிப்படுத்துவதாகவும் அமைந்திருந்தது. யாழ்…