வேதத்திலும், தமிழ் இலக்கியத்திலும், வல்வையிலும் “இந்திர விழவிழா

700 0

உலக இந்துக்களின் மிகத் தொண்மையான விழாக்களில் ஒன்று இந்திர விழா. இந்திரன் இடம்பெறாத தமிழ் நூல்களே இல்லை என்று சொல்லிவிடலாம். புறநானூற்றில் உண்டு. திருக்குறளில் உண்டு. ஐங்குறு நூற்றிலும் இருக்கிறது. தேவலோக அமிழ்தம்> நிறைய இடங்களில் வருகிறது. இந்திர விழா பற்றி தமிழில் இரட்டைக் காப்பியங்கள் என்று புகழப்படும் சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் இந்திர விழா மிகவும் சிறப்பான இடத்தைப் பெறுகிறது.

ஆனால் இதன் தோற்றம் வேதத்திலும் ராமாயண> மஹா பாரத இதிஹாசங்களிலும் உள்ளது. இன்றும் நேபாள நாட்டில் பெரிய விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. டாங்கே> மெயர் போன்ற வேத நூல் அறிஞர்கள் இந்திரவிழா பற்றிய குறிப்பு உலகின் மிகப் பழைய நூலான ரிக் வேதத்திலும் அதர்வ வேத்திலும் இருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்திர விழா தோற்றம்

இந்திரன் விழாவில் முக்கிய அம்சம் கொடி ஏற்றம். அதற்கு முன் வள்ளுவன் பறை அறிவிப்பான். உடனே ஊர் முழுதும் அலங்கரிக்கப்படும். 28 நாட்களுக்கு நாடே விழாக்கோலம் பூணும். ஆடலும் பாடலும் புத்துயிர் பெறும். அதைக் கொண்டாடாவிடில் இயற்கையின் கோபத்துக்கு நாடு உள்ளகும். இறுதி நாளில் இந்திரன் கொடிக்கம்பம் வீழ்த்தப்படும். மணி மேகலையும் சிலப்பதிகாரமும் இது பற்றி நிறைய தகவல் தருகின்றன.

இன்றும்கூட குச்சிப்புடி முதலிய நடனங்களில் மேடையில் இந்திரன் கொடி வைக்கப்படுகிறது. சிலப்பதிகார, மணிமேகலை புகழ் மாதவிக்குக் கொடுக்கப்பட்ட தலைக் கோல் இந்திரன் மகன் ஜயந்தனுடன் தொடர்புடையது.

நேபாளத்தில் இந்திர விழா

இன்றுவரை இந்திர விழாவை பழந்தமிழ்நாடு போலக் கொண்டாடும் நாடு நேபாளம். அதன் தலை நகரமான காத்மண்டுவில் ஆண்டுதோறும் அரசாங்கத் திருவிழாவாக நடைபெறுகிறது. தமிழ் நாடு போலவே கொடி ஏற்றி ஆடல் பாடலுடன் இந்திர தேவன் ஊர்வலத்துடன் விழா நடைபெறுகிறது.

தாய்லாந்து, லாவோஸ், கம்போடியா, பர்மாவில் ஏப்ரல் மாத புத்தாண்டு தினத்தில் நடைபெறும் நீர் விழாவும், இன்று இந்தியா முழுதும் நடை பெறும் ரக்ஷா பந்தனும் (கையில் சகோதரிகள் கட்டிவிடும் காப்பு) இந்திரன் தொடர்புடைய விழாக்களே.

பொங்கலுக்கு முதல் நாளன்று தமிழர்கள் கொண்டாடும் போகிப் பண்டிகை இந்திர விழாவின் ஒரு பகுதியே. போகி என்பது இந்திரனின் பெயர்களில் ஒன்று.

கண்ணன்—- இந்திரன் “மோதல்”

இந்தியாவிலும் வெளிநாட்டிலும் சில “அதிமேதாவிகள்” உண்டு. இந்திய மக்களையும் நாட்டையும் பிளவுபடுத்த ஏதேனும் ஆரிய மாயை ,திராவிட மாயை கிடைக்காதா என்று கண்ணில் விளக்கெண்ணயை ஊற்றிக் கொண்டு தேடுவார்கள். வெறும் வாயை மெல்லும் இந்த பரிதாப கேசுகளுக்கு அவல் கிடைதது போல பாகவதத்தில் ஒரு செய்தி வருகிறது. இந்திரன் விழாவை கண்ணன் நிறுத்தி தனக்கும் பாதி பங்கு கேட்டான் என்று. இதனால் இந்திரன் கோபம் கொண்டு பேய் மழை பெய்யச் செய்யவே கண்ணன் கோவர்த்தன மலையைத்தூக்கி தனது மக்களைக் காப்பாற்றினான் என்று. கண்ணனின் பகவத் கீதையையே நம்பாதப் பரிதாபக் கேசுகள் இதை மட்டும் பிடித்துக்கொண்டுள்ளார்கள்.

உண்மை என்னவென்றால் இந்தியா தமிழ் நாட்டைப் போலவே கிருஷ்ண பூமியிலும் இந்திர விழா நடைபெற்றது. சோழ மன்னன் அதை நிறுத்தியதால் காவிரிப் பூம்பட்டிணத்தைக் கடல் கொண்டது என்று மணிமேகலை கூறுகிறது. ஆக இந்திர விழாவை நிறுத்தினால் இயற்கைச் சீற்றம் ஏற்படும் என்பதை வட ,தென் இந்தியர்கள் ஒப்புக்கொண்டனர் என்பதே உண்மை.

தொல்காப்பியர் குறிப்பிட்ட இந்திர வழிபாட்டை,, வேதங்கள் குறிப்பிட்ட இந்திர வழிபாட்டை இன்றுவரை தமிழ் பிராமணர்கள் மற்றும் தமிழ் நாட்டுக் கோவில் பூசாரிகள், அர்ச்சகர்கள் பின்பற்றிவருவது 3500 ஆண்டுக்கும் மேற்பட்ட பாரம்பர்யத்தின் தொடர்ச்சி என்பதை அறியும்போது மெய்சிலிர்க்கிறது.

வல்வையில் “இந்திர விழா”

இந்திர விழா இலங்கையில் வேறு எங்கும் கொண்டாடுவது இல்லை. வல்வெட்டித்துறையில் முத்துமாரி அம்பாளின் 15 ம் திருவிழாவான தீர்த்த திருவிழாவையே இந்திர விழாவாக ஆண்டு தோறும் சித்திரை பௌர்ணமி அன்று வெகு விமரிசையாக
காலங்காலமாக கொண்டாடுகிறார்கள்.

9 க்கும் மேற்பட்ட இடங்களில் கச்சேரிகளும், வீதிகள் தோறும் வாழை தோரணம், அலங்கார வளைவுகளும் பொம்மலாட்டம், கரகாட்டம் என வல்வெட்டித்துறையின் ஒன்றரை மைல் சுற்றுவட்டாரமே பெரும் விழாக்கோலம் பூண்டு நிக்கும்.
ஆரம்ப காலங்களில் 70, 80 களில் எம் முன்னோர்கள் நடாத்திய இந்திர விழா முழு இலங்கையை வியப்பில் ஆழ்த்தியது. கடந்த காலங்களில் நாட்டில் அம்பாளின் திருவிழா காலங்களை ஏற்பட்ட அசாதாரண நிலையால் சில காலம் அம்பாளின் இந்திர விழா நிறுத்தப்படுவதுண்டு.

இருந்தும் அம்பாளின் திருவிழாவுக்கு சிறிது காலம் முன்னே சாதாரண நிலையில் நாடு இருக்குமாயின் வல்வெட்டித்துறை மக்கள் அம்பாளுக்கும் செய்யும் திருவிழாவும் நிறுத்துவதுமில்லை மட்டுப்படுத்துவதுமில்லை. அதுக்கு ஒரு உதாரணம்

1990 ம் ஆண்டு இந்திர விழா

1989 ம் ஆண்டு 08 ம் மாதம் 02 ம் திகதி வல்வெட்டித்துறையில் நடந்த மோதலில் 09 இந்திய இராணுவம் பலியானதுக்காக 2 ம், 3 ம், 4 ம் திகதிகளில் வல்வெட்டித்துறையில் மிக கோரத்தாண்டவம் ஆடியது இந்திய இராணுவம்.
63 பொதுமக்கள் கொல்லப்பட்டும்
100 க்கு மேற்பட்ட மக்கள்காயப்பட்டும்
123 வீடு முற்றாக எரித்து சாம்பலாக்கியும்
45 கடைகள் முற்றாக சூறையாடப்பட்டும்
175 மீன் பிடி வள்ளங்கள் முற்றாக எரித்தும்
முழு வல்வெட்டித்துறையும் சுடுகாடாக்கியது இந்திய இராணுவம்.
இவ்வளவு அனர்த்தத்தையும் எதிர்கொண்ட வல்வை மக்கள் இன் நாளில் இருந்து 08 மாத முடிவில் 90 ம் ஆண்டு சித்திரை மாதம் அம்பாளின் அனைத்து திருவிழாவும் வழமையை விட மிக சிறப்பாக செய்தார்கள்.

அதிலும் உச்சம் வைத்தாற்போல் வல்வை நெடியகாடு வரவேற்பு மண்டபக்குழுவாள் முழு வல்வை மக்களின் பங்களிப்போடு நடாத்தும் இந்திர விழா கடந்த காலங்களை விட மிகவும் சிறப்பாக 07 க்கும் மேற்பட்ட இடங்களில் கச்சேரிகளும், வீதிகள் தோறும் வாழை தோரணம், அலங்கார வளைவுகளும், மின் அலங்கார வளைவுகள் பொம்மலாட்டம், கரகாட்டம் என விழாக்கோலமாகியது வல்வெட்டித்துறை. இவ்விழாவுக்கு இலங்கையின் பல பாகங்கலிருந்தும் இரண்டு லட்சத்திக்கு மேற்பட்ட மக்கள் வருகை தந்தார்கள், வியர்ந்தார்கள்.

இழப்புகளுக்காகவும், அழிவுகளுக்காகவும் ஒரு இனம் தமது கலை, கலாச்சார, சமய நிகழ்வுகளையும் தவிர்த்து வாழுமாயின் அந்த இனம் முழுமை பெறாது என்ற கூற்றோடு வாழும், வாழ்ந்து காட்டிய வல்வெட்டித்துறை மக்களுக்கே உரித்தான இந்திர விழா. பண்டைய காலம் முதல் இன்றைய காலம் வரை அதன் சிறப்பு வல்வையராகிய எம்மை பெருமை கொள்ள வைக்கிறது.
~நன்றி ~

Related Post

சாவகச்சேரி இறைச்சி கொல்களம்: ‘சீல்’ வைத்தால் மட்டும் போதுமா?

Posted by - April 27, 2018 0
புதிதாக பதவியேற்ற சாவகச்சேரி நகரசபை, நகரிலிருந்த கொல்களம் ஒன்றை சீல் வைத்தார்கள் என்ற செய்தி வெளியாகியிருந்தது. சட்டவிரோத கொல்களத்தை நகரசபையினர் அதிரடியாக சீல் வைத்தனர் என்ற செய்தி…

விக்னேஸ்வரன் என்ன செய்யப் போகின்றார்? சி.அ.யோதிலிங்கம்

Posted by - May 5, 2018 0
மாகாணசபைத் தேர்தல்களை அரசாங்கம் இந்த வருடம் நடாத்துமோ என்னவோ தமிழ் அரசியலில் அதற்கான பரபரப்பு ஆரம்பித்துவிட்டது. தமிழ் தேசியக் கூட்டமைப்பில் தீர்மானம் எடுக்கும் சக்திகளாக உள்ள சம்பந்தனோ,…

நம்பிக்கையில்லாப் பிரேரணையும் சட்டமும்

Posted by - November 15, 2018 0
  நேற்று (14/11/2018) புதிதாக நியமிக்கப்பட்ட பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கும் அவரது அரசுக்கும் எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவித்தார். பாராளுமன்ற நிலையியற்கட்டளை பின்பற்றப்படவில்லை;…

“மறக்கோம் மன்னிக்கோம்” என்பது கிழக்கு திமோர் (East Timor), போஸ்னியா (Bosnia) நாடுகளின் கோற்பாட்டின்படி சரியான கொள்கை

Posted by - February 20, 2019 0
ஏன் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் சிறிலங்கா போர்க்குற்ற விசாரணை தேவை? 1950 களில், தொடர்ந்து தமிழர்களை சிங்களவர்கள் தொடர்ந்து தாக்கினார்கள். இதனை நிறுத்துவதற்கு போர்க்குற்ற விசாரணையும் அதற்க்கான…