12 வயது சிறுமியை மிரட்டி மீண்டும் மீண்டும் கற்பழித்து கர்ப்பமாக்கிய ஆட்டோ ஓட்டுநர்!!

677 0

சென்னை திருநின்றவூர் அருகே 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பினி ஆக்கிய ஆட்டோ ஓட்டுனரை போலிசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
திருநின்றவூர் நெமிளிச்சேரி ரயில் நிலையம் பகுதியில் டீ கடை நடத்தி வரும் பெண் ஒருவர், உடல் நிலை சரியில்லாத தன்னுடைய 12 வயது மகளுக்கு ஜூஸ் வாங்கி அதனை ஆட்டோ ஓட்டுனர் பரமசிவத்திடம் கொடுத்தனுப்பியுள்ளார்.
சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட பரமசிவன், ஜூஸில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். சில நாட்கள் கழித்து சிறுமியை மிரட்டி மீண்டும் வன்புணர்வு செய்துள்ளான்.
வயிற்று வலியால் அவதிப்பட்ட சிறுமியை மருத்துவமனையில் பரிசோதித்தபோது, 4 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாயார், திருநின்றவூர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். ஆட்டோ ஓட்டுனர் பரமசிவன் சிறுமியிடம் தகாத முறையில் நடந்துகொண்டது விசாரணையில் தெரியவந்ததையடுத்து திருநின்றவூர் போலிசார் பரமசிவனை, POCSO சட்டத்தில் கைதுசெய்தனர். பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Related Post

மணமகன் வேண்டும் பேஸ்புக்கில் புகைப்படங்கள் பதிவு செய்த கேரளா பெண்

Posted by - May 5, 2018 0
சமூகவலைதளமான பேஸ்புக்கை, வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் ஷேர் செய்யவும், தகவல்களை அறிந்துகொள்ளவும் தான் பயன்படுத்துகிறார்கள். ஆனால் கேரளாவை சேர்ந்த ஜோதி என்ற பெண் பேஸ்புக் தளத்தை, மெட்ரிமோனி…

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் – பொன்னார் உறுதி.!

Posted by - April 28, 2018 0
காவிரி மேலாண்மை வாரியத்தினை அமைத்திட வேண்டுமென உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பின்னரும் அதனை செயற்படுத்திடாத மத்திய பாஜக அரசினைக் கண்டித்தும், மேலாண்மை வாரியத்தினை அமைத்திடக்கோரியும் தமிழகம்…

மல்லையாவை நாடு கடத்தும் வழக்கு: சிபிஐ அளித்த ஆதாரங்களை ஏற்றது லண்டன் நீதிமன்றம்

Posted by - April 27, 2018 0
லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் நீதிமன்றத்தில் விசாரணை முடிந்து வெளியே வந்த விஜய் மல்லையா வங்கியில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் பெற்று, மோசடி செய்து லண்டனில் வசிக்கும்…