ஏமனில் சவுதி கூட்டு படைகள் தாக்குதல்!

402 0

ஏமனில் சவுதி கூட்டு படைகள் நடத்திய தாக்குதலில் 50 ஹவுத்தி போராளிகள் பலியாகியுள்ளனர்.

ஏமனில் அரசுக்கு எதிராக கடந்த 2 வருடங்களாக ஹவுத்தி போராளிகள் ஈரானின் ஆதரவுடன் ஆயுத பேராட்டத்தை நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக ஏமனில் பல பகுதிகளை ஹவுத்தி பேராளிகள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளதோடு, தமது கட்டுப்பாட்டுக்குள் உள்ள பகுதிகளை சுற்றி சோதனைச் சாவடிகளை அமைத்துள்ளனர்.

இந்நிலையில் சர்வதேச ஆதரவு பெற்றுள்ள ஏமன் அரசுக்கு சவுதி கூட்டுப்படைகள் ஆதரவு வழங்கி வருகின்றன. இதனால் சவுதி கூட்டு படைகள் ஹவுத்தி போராளிகளுக்கு எதிராக விமான தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனடிப்படையில் ஏமனில் உள்ள சனா நகரில் சவுதி கூட்டு படைகள் நேற்று விமான தாக்குதலை மேற்கொண்டுள்ளன. இதன் காரணமாக 50 ஹவுத்தி போராளிகள் கொல்லப்பட்டுள்ளதாக சவுதி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Related Post

மல்லையாவை நாடு கடத்தும் வழக்கு: சிபிஐ அளித்த ஆதாரங்களை ஏற்றது லண்டன் நீதிமன்றம்

Posted by - April 27, 2018 0
லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் நீதிமன்றத்தில் விசாரணை முடிந்து வெளியே வந்த விஜய் மல்லையா வங்கியில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் பெற்று, மோசடி செய்து லண்டனில் வசிக்கும்…

65 ஆண்டுகளுக்கு பின் தென்கொரியா சென்றுள்ள வடகொரிய ஜனாதிபதி!

Posted by - April 27, 2018 0
வடகொரியா ஜனாதிபதி இன்று தென்கொரியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். வடகொரியாவுக்கும், தென் கொரியாவுக்கும் இடையே நடந்த கொரியா போர் முடிந்து 65 ஆண்டுகள் ஆகின்றன. எனினும், வடகொரியா ஜனாதிபதிகள்…