பாலிவுட் பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா பல சவாலான கதாபாத்திரங்களில் நடிப்பவர். போன வருடம் லண்டனை சேர்ந்த ஈஸ்டர்ன் ஐ என்ற வார பத்திரிகை ஆசியாவின் 50 கவர்ச்சியான பெண்களின் பட்டியலை வெளியிட்டது அதில் பிரியங்கா சோப்ரா முதல் இடத்தை பிடித்தார். ஹாலிவுட் தொலைக்காட்சியின் ஒரு தொடர் மூலம் அமெரிக்க மக்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தார் பிரியங்கா சோப்ரா.
ஹாலிவுட்டிலும், பாலிவுட்டிலும் கலக்கிக் கொண்டிருக்கிறார் முன்னாள் உலக அழகியான பிரியங்கா, தற்போது ஹாலிவுட் சினிமாவின் அந்த என்ற தொடரின் மூன்றாம் பாகத்தில் நடித்து வருகிறார். மேலும், உலக அளவில் சில நல அமைப்புகளுக்கு தூதுவராகவும் இருக்கிறார். இவர் தற்போது நடித்து வரும் அந்த தொடரின் மூன்றாம் பாகம் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த தொடருக்காக நடந்த படப்பிடிப்பின் போது பிரியங்காவிற்கு எதிர்பாராத விமதமாக கால் மூட்டில் பலத்த அடிப்பட்டுள்ளது. இதனால் அவரால் மூன்று வாரங்கள் படப்பிடிப்பில் கலந்துகொள்ள முடியாதாம். இதனால் அவரது இல்லத்தில் ஓய்வு எடுத்து வருகிறாராம். இந்த விஷயத்தை அவரே அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.